பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
உயர் கல்வி நிறுவனங்கள் பாடப்புத்தகங்களை தயாரிப்பதிலும், தாய்மொழி, பிராந்திய மொழிகளில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
ஆங்கில வழி படிப்பாக இருந்தாலும் உள்ளூர் மொழிகளில் தேர்வு எழுத மாணவர்களை பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கவேண்டும். அசல் உள்ளடக்கங்களை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், கற்பித்தல்-கற்றலில் உள்ளூர் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...