அதன் விபரம்:
விடைக் குறிப்புகளை நன்றாக மனதில் பதித்து, விடைகளை திருத்த வேண்டும் மதிப்பெண் குறிப்பிடுவதில் பிழைகள், தவறுகள் ஏற்படக் கூடாது
மதிப்பெண்களை சரியாக குறிப்பிடாமல், புகார் வரும் பட்சத்தில் அல்லது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
திருத்தப்பட்ட விடைத்தாள்களை கூர்ந்தாய்வாளர்கள் சரிபார்க்க வேண்டும். முந்தைய காலங்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு மேற்கொண்டபோது, விடைத்தாளின் முந்தைய மதிப்பெண்களில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டு, நீதிமன்றம் வரை வழக்குகள் பதிவாகின
சில திருத்துனர்கள், சில பக்கங்களை திருத்தாமல் விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அரட்டை அடித்தபடி, விடைத்தாள் திருத்தக் கூடாது விடை திருத்தும் அறையில், மொபைல் போன் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது விதிமீறல் கண்டறியப்பட்டால், ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்
எனவே, விடை திருத்தும் ஆசிரியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு தேர்வுத் துறை கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...