தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள்
கழகம் சார்பில், 'நம்ம ஊர் பள்ளி' திட்டத்திற்கு, 43 லட்சம் ரூபாய்,
முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, 'டெக்ஸ்கோ' எனப்படும், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் செயல்பட்டு வருகிறது.
இதன், 2021 - 22ம் நிதியாண்டுக்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியில் இருந்து, நம்ம ஊர் பள்ளி திட்டத்துக்கு, 43 லட்சத்து, 735 ரூபாய் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை, தலைமை செயலகத்தில், பொதுத்துறை செயலர் ஜகந்நாதன், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது, தலைமைச் செயலர் இறையன்பு, சிறப்பு செயலர் கலைஅரசி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...