Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு எப்போது?

தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு முடிந்து விட்டது. பிளஸ் 1 பொது தேர்வு இன்று முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவங்குகிறது.


இந்நிலையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு எப்போது என, பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.


பள்ளிக்கல்வித் துறையின் ஆண்டு அட்டவணைப்படி, வரும், 20ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த வேண்டும்.


இந்நிலையில், ஆண்டு இறுதி தேர்வுகள் தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், தேர்வு அட்டவணையை முடிவு செய்யலாம் என, பள்ளிக்கல்வி கமிஷனரகம் மற்றும் தொடக்க கல்வி துறை சார்பில், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இதன்படி, சில மாவட்டங்களில், 11ம் தேதியும்; சில மாவட்டங்களில், 17ம் தேதியும் ஆண்டு இறுதி தேர்வுகளை துவங்க முடிவாகி உள்ளது.


பள்ளியின் கடைசி வேலைநாள் வரும், 28ம் தேதி என்பதால், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்தாலும், 28ம் தேதி வரை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்; 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.





2 Comments:

  1. When il come to 1 to 5 annual exam timetable? Please update

    ReplyDelete
  2. When will come to know 1 to 5 annual exam timetable? Please update

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive