நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டு சிமேட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 13-ல்தொடங்கி மார்ச் 13-ம்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுகால அட்டவணையை என்டிஏதற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சிமேட் தேர்வு மே 4-ம்தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வானது 3 மணிநேரம் நடைபெறும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை cmat.nta.nic.in, www.nta.ac.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்றதொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...