Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.23

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் : 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

பழமொழி :

An old dog will learn no tricks.
இளமையில் கல்லாதது முதுமையில் வராது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்.

பொது அறிவு :

1. தேசிய கடல்வழி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

ஏப்ரல் 5.

 2. தேசிய அறிவியல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

பிப்ரவரி 28.

English words & meanings :

 pacify - make the angry person calm, அமைதி படுத்துதல், 

pantry - a small room where food is kept, உணவு சேமிப்பு அறை.

ஆரோக்ய வாழ்வு :

ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள திராட்சை நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்யத்திற்கும், சருமத்திற்கும் நன்மை தருகிறது. நம் உடலின் இரத்த குழாய்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை உடல் முழுவதிலும் மேம்படுத்துகிறது. திராட்சையில் உள்ள தாவர ஊட்டச் சத்துக்கள் நம் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் முதுமை தள்ளிப்போடப் படுகிறது. மேலும் திராட்சை எடை குறைப்பு, எடை சமாளிப்பு, மூளையின் ஆற்றலை அதிகப் படுத்துதல், மூளையின் செயல்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் உதவுகிறது

கணினி யுகம்

Windows key + C - Open Cortana in listening mode.
Windows key + D - Display and hide the desktop.



ஏப்ரல் 26






செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.
இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாகா காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.

நீதிக்கதை

நாளை என்பது நம் கையில் இல்லை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.

கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

இன்றைய செய்திகள்

26.04. 2023

* அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மைப் பணிகளுக்கு தனியாரை நியமிக்கும்போது, தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என டெண்டர் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

* செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

* காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 48 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

* ஊடகங்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளிக்க கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடந்த  நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

* சென்னையில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் பங்கேற்பது உறுதி.

* சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

Today's Headlines

* The Madras High Court has directed the tender committee to consider making it mandatory to appoint personnel who know Tamil while appointing private individuals for maintenance, security, and cleanliness work in government schools.

* Plus 2 Public Exam Result Release Date Changed: Minister Anbil Mahes Information.

 * Tamil Nadu ranks 2nd in the list of states with the highest number of accounts opened under the Selvamalam Savings Scheme.

*  According to the Central Drug Quality Control Board, 48 medicines for problems like fever and high blood pressure are substandard.

*  Judges should not give interviews to media - Supreme Court orders.

*  After four meteors passed the Earth yesterday, a 1007 feet high meteorite will pass by today, according to NASA.

*  Pakistan and China are confirmed to participate in the Asian Hockey Tournament in Chennai.

 * Ticket sales for the Chennai-Punjab match will begin on the 27th.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive