தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டம் அமல், காலியாக உள்ள, 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்து, பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடியை களைவதற்கான வழிமுறைகள் குறித்து, எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத் தலைவர் குமார்:
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.
தி.மு.க., அரசின் மூன்றாவது பட்ஜெட், அரசு பணியாளர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட்:
அனைத்து துறை பள்ளிகள் ஒருங்கிணைப்பு வரவேற்கத்தக்கது.
தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதியான, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடை களைதல், ஊக்க ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் ஊதியக்குழுவின், 21 மாத நிலுவை தொகை வழங்குதல் போன்ற நீண்ட கால கோரிக்கைகள் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...