பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி, முதலில் முதுகலை பட்டம் பயின்று PG பட்டம் பெற்றுவிட்டு, அதன் பிறகு அதே பாடத்தில் மூன்று ஆண்டு இளங்கலை பட்டம் பெற்று இருந்தாலும் கடந்த மூன்று ஆண்டுளாக Same Major ஆகக் கருதி PG பதவி உயர்வு வழங்கப்பட்டு PGயாக பதவி உயர்வில் சென்று பணிபுரிந்து வருகிறார்கள். எனவே அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்த தகவலை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு PG யாக பதவி உயர்வில் செல்லுமாறு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எந்த CEO வாவது PG க்கு பின்னால் பயின்ற பட்டப் படிப்பை Same Major ஆக எடுத்துக் கொள்ள முடியாது என மறுத்தால், உடனடியாக சென்னை சென்று Joint Director (Higher Secondary) திருமிகு , இராமசாமி அய்யா அவர்களைச் சந்தித்து தங்களின் PG Panel Proposal Copy யுடன் சம்பந்தப்பட்ட CEO மறுத்த விபரத்தை கூறி (JDHS) அய்யாவிடம் மனு கொடுத்தால் உடனடியாக Panel வாங்க மறுக்கும் CEO மீது நடவடிக்கை எடுப்பதோடு, உங்கள் பெயரினை PG panelலில் சேர்த்து PG யாக பதவி உயர்வு வழங்குவார்கள் என்பதையும் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இவண், நல்லாசிரியர், ஆ வ அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம். கைபேசி எண் : 94436 19586
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...