பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள
திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில்
முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,
சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை
கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு
செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட
அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை, 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. எரிசக்தி துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், போக்குவரத்து, பொதுப்பணி, தொழில் முதலீடு, கைத்தறி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...