🌟நீங்கள் தேர்வு அறையில் ஒரு நாள் ஆற்றும் பணி அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் நீங்கள் செய்யும் மாபெரும் சேவை.
🌟 அது என்னவென்று யோசிக்கிறீர்களா ஆம்... ஆம்.. நிஜமாகவே நீங்கள் ஒரு சாதனையை செய்ய வேண்டும் அது என்ன தெரியுமா?
🌟 தேர்வு அறையில் மாணவனை ஒரு சிறிய சந்தர்ப்பத்திலும் பார்த்து எழுத விடாத படி கவனமாக இருப்போமாயின் அவன் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதை எண்ணி மிகவும் கவனமாக இருப்பான்.
👋 ஓராண்டு காலம் ஆசிரியர் சொல்லும் அனைத்து பணிகளையும் செய்து சிறந்த முறையில் கற்று தேர்வுக்கு தயாராவான்.
👨🦰 எப்படியும் பார்த்து எழுதிவிடலாம் என்கிற எண்ணம் தற்பொழுது இருக்கிற மாணவ சமுதாயத்திடையே மேலோங்கி இருக்கிறது.
அதை உடைத்து.....
படித்து வந்தால் மட்டுமே தேர்வறையில் தனித்து நம்மால் தேர்வை சந்திக்க முடியும், வெற்றி பெற முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்குகிற மாபெரும் சாதனைப் பணி தற்போது ஒவ்வொரு அறை கண்காணிப்பாளர் பொறுப்பிலும் இருக்கிறது.
உங்களிடத்தில் அன்பான வேண்டுகோள் அடுத்தாண்டு ஒவ்வொரு ஆசிரியனையும் ஒவ்வொரு மாணவனும் மதித்து நடக்க உங்களிடத்தில் இருகரம் கூப்பி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் ஓர் நாள் பணியை ஓராண்டு சாதனையாக மாற்றுங்கள் என்றும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருப்போம்.
- அரசு பள்ளி ஆசிரியரின் பதிவு
அப்போ, ஆல் பாஸ்
ReplyDeleteLet the hard working student get pass.
DeleteEvery teacher should realize this fact. The teachers are the creators of leaders of tomorrow's nation. If they are correct the students will be correct. Let us join our hands together for the betterment of the student's society.
ReplyDelete