
இதையடுத்து, தேசிய நுகர்வோர்
குறைதீர்ப்பு ஆணையத்தில் நீலம் சோப்ரா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்து
ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இறந்த போன நபர்
இதயம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக இறந்துள்ளார். அந்த பிரச்னை அவர்
இறந்த தேதிக்கு முன்னதாக 5 மாதங்கள் மட்டும்தான் இருந்துள்ளது. அதனால், இது
வழக்கமான நோயும் அல்ல. மேலும், சர்க்கரை நோய் என்பது முன்பே சில காலம்
இருந்திருந்தாலும் இறந்த நபர் காப்பீட்டுத் தொகை கேட்டு விண்ணப்பிக்கும்
போது சர்க்கரை நோ்ய் கட்டுக்குள் இருந்துள்ளது தெளிவாக தெரிகிறது.
அதனால்,
காப்பீடு செய்யும் நபர் இதுபோன்ற நோய்களை மறைத்து விட்டார் என்று காரணம்
கூற உரிமை இல்லை. காப்பீட்டு தொகை வழங்க மறுத்தால் காப்பீடு செய்தவர்கள்
பாதிக்கப்படுவார்கள். காப்பீடு செய்யும் போது முன்பே இருக்கும் நோய் பற்றிய
விவரங்களை மறைத்திருந்தாலும் அது இறப்புக்கு காரணமாக இருக்க முடியாது
அல்லது இறப்புக்கு நேரடியான தொடர்பு இல்லாத போது அதை வைத்து காப்பீட்டு
தொகை கேட்க முடியாது என்று முற்றிலும் மறுக்கக் கூடாது.எனவே, இறந்த நபரின்
குடுப்பத்தினருக்கு எல்ஐசி நிறுவனம் ரூ 5 லட்சம் வழங்க வேண்டும், ஈட்டுத்
தொகையாக ரூ ரூ 25 ஆயிரம், நீதிமன்ற வழக்கு செலவுக்காக ரூ 5 ஆகியவற்றை 45
நாட்களுக்குள் சண்டிகர் எல்ஐசி கிளை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...