மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - முதன்மைக்
கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை
இயக்குநரின் செயல்முறைகள்.
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படவேண்டும் . மேலும் , கூடுதல் தேவை ஏற்படின் அரசு மேல்நிலைப் பள்ளி / அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியரை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . இச்செயல்முறைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் புகாருக்கு இடமின்றி கடைபிடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...