நீண்ட
நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர்
உயிரிழந்துள்ளார். திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால்
தனியார் மருத்துமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் என
நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று காலை
உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில்
கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று அடங்கி இருந்த நிலையில்
தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி
நேரத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235
ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னை, கோவையில் 10
பேரும், செங்கபட்டில் 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 3 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 2 பேருக்கும்
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தருமபுரி, கடலூர், கன்னியாகுமரி,
திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு
பிறகு கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார்
மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...