தமிழ்நாடு அரசை பொறுத்த வரையில் புதிய ஓய்வூதிய திட்டமானது நடைமுறையில் உள்ளது. ஆனால் பொதுவாகவே அரசு ஊழியர் சங்கங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு யாருக்காவது மாற்றப்பட்டுள்ளதா, எதன் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது, நீதிமன்ற உத்தரவு, அல்லது அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை சேகரிப்பதற்காக அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் 2003-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை உள்ள புதிய பென்சன் திட்டத்தில் இருந்து பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனரா? அவ்வாறாக மாற்றப்பட்டிருந்தால் ஏதன் அடிப்படையில் மாற்றப்பட்டனர், யாருடைய உத்தரவின் பேரில் மாற்றப்பட்டனர், எந்தெந்த துறைகளில் எல்லாம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் நிலையில், தகவல்கள் தற்போது நிதித்துறை செயலாளர் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசை பொறுத்தவரையில் புதிய பென்சன் திட்டத்தில் இருந்து பழைய பென்சன் திட்டதிற்கு மாற்றுவது தொடர்பாக துரிதமான முடிவு இதுவரை எடுக்கப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...