Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.03.2023

 

      திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண்: 166
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்.


பொருள்:
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

பழமொழி :

First impression is the best impression


முதல் அபிப்பிராயமே சிறந்த அபிப்பிராயம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

பல செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.

பொது அறிவு :

1. உலகில் அதிகமாக காணப்படும் உயிரின வகை எது? 

 பூச்சிகள்.

 2. மின் தீயை அணைக்கப் பயன்படுவது எது? 

 கார்பன் டெட்ரா குளோரைடு.

English words & meanings :

 mantis - an insect looks like as it is praying, noun. மான்டிஸ். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

ஒரு வேகவைத்த முட்டையில் இருந்து 0.6 மைக்ரோகிராம் அளவுக்கு வைட்டமின் பிி12 கிடைக்கும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் பி12 இருக்கிறது என்பதால் முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதோடு வைட்டமின்களும் புரதச்சத்தும் சேர்த்து கிடைக்கும். அதனால் தினசரி உணவில் வேகவைத்த முட்டையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணினி யுகம்

Shift + Ins - Paste the selected item. Home - Takes the user to the start of the current line


மார்ச் 31


ஜெசி" ஓவென்ஸ்  




ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 121913-மார்ச் 311980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.

நீதிக்கதை

கதை :

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிட வேண்டும் என்று ஆசை, தங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது. 


ஆண்முதலை  என்ன செய்வதென்று யோசித்தது. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது. 


நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கும் விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது. 


முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது.  குரங்கிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. 


சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே மரத்தில் இருப்பதாக கூறியது. 


முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்லப்பார்கிறாயா? என்று சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது. 


நீதி :

நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

இன்றைய செய்திகள்

31.03. 2023

* 3,414 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* நலிந்த நிலையில் உள்ள சென்னையை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஓய்வூதிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

* தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் ‘டெலி மெடிசின்’ மூலம் உயர் மருத்துவ சேவை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்.

* உக்ரைன், சீனாவில் இருந்து கரோனாவால் திரும்பிய இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல்.

* உளவு பார்த்ததாக கூறி அமெரிக்க பத்திரிகையாளரை கைது செய்த ரஷ்யா.

*  பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

* 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ரைபகினா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Rs 1031.32 crore fund for cash benefits of 3,414 retired transport employees: Chief Minister Stalin orders.

 * The District Collector has announced that former athletes from Chennai who are in a debilitating condition can apply for pension assistance.

*  Higher Medical Service through 'Tele Medicine' in Underprivileged Villages of Tamil Nadu: Director of Public Health Information.

 * Chance of rain in Tamil Nadu for 4 days: Chennai Meteorological Department information.

 * Final year medical students who returned from Ukraine, China due to Corona are allowed to take the exam: Central Government's reply in the Supreme Court.

 * Russia Arrests American Journalist for Spying

 * Violence broke out in France against President Macron's reform plan to raise the retirement age from 62 to 64.

*  The 16th IPL will feature 10 teams.  The cricket matches will start at 7.30 pm tonight.

* Spain Masters Badminton: Indian player P.V.  Sindh advances to 2nd round.

 * Miami Open Tennis: Jessica Pegula, Rybakina advance to semifinals
 Prepared by

Covai women ICT_போதிமரம்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive