Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக பட்ஜெட் 2023 - முக்கிய அறிவிப்புகள் ( Live Update ...)

whatsapp-image-2023-03-19-at-11-31-02-pm_900x450xt

2023-24 நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தற்போது தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

தமிழக பட்ஜெட் 2023 - முக்கிய அறிவிப்புகள் :

Live Update :

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு உரையை தொடங்கிய நிதியமைச்சர் மதியம் 12 மணி வரை தாக்கல் செய்தார். அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு இன்றைய பட்ஜெட் முடிவடைவதாகவும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பட்ஜெட் தொடர் தொடங்கும் எனவும் அறிவித்தார்

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலையை நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம் - அமைச்சர்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மகளிர் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

அரசு பணியாளர்களுக்கு  வீடு கட்ட வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ50 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் குடும்ப நலன் கருதி சிறப்புநிதியாக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவு கட்டணம் நான்கு சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக குறைப்பு - நிதி அமைச்சர்

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசு சேவை முகாம்கள் நடத்தப்படும். மக்களை தேடி சென்று அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க இத்திட்டம் உதவும்- நிதி அமைச்சர்

முதல்வரின் முகவரித் திட்டத்தில் 11.7 லட்சம் மனுக்களில், 11.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களையும், சேவைகளையும் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - நிதி அமைச்சர்

நடப்பாண்டில் 574 கோவில்களில் திருப்பணி முடிக்கப்பட்டு குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் நிதி ஆண்டில் 420 கோவில்களுக்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் - நிதி அமைச்சர்

கோவில் சொத்துகளை பாதுகாக்க அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன - நிதி அமைச்சர்

சுற்றுலா துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சுற்றுலா கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியிடப்படும்.பிச்சாவரம் பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களில் மேம்படுத்த 55 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

தகவல் தொழில்நுட்பம் 

சென்னை, தாம்பரம் ஆவடி, கோயம்புத்தூர் மதுரை திருச்சிராப்பள்ளி சேலம் மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச  வைஃபை சேவைகள் வழங்கப்படும்.

மின் கட்டணம் செலுத்தும் அனைத்து  நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் -  நிதி அமைச்சர் 

மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் -  நிதி அமைச்சர் 

கடந்த இரண்டுகளாக தமிழ்நாடு தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 3,59,000 பேருக்கு வேலை வாய்ப்பு, 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளன -  நிதி அமைச்சர் 

2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு செயல்படுத்தும். -  நிதி அமைச்சர் 

போக்குவரத்து

ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ500 கோடி ரூபாய் ஒதுக்கீடு -  நிதி அமைச்சர் 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன - நிதி அமைச்சர்

உணவு மானிய திட்டத்திற்கு ரூபாய் 10,500 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் 10,000 குளங்கள் ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் - நிதி அமைச்சர்

பெண் தொழில் முனைவோர் புதிய தொழில்களை தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும் - நிதி அமைச்சர்

காலை உணவு திட்டத்தால் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு திட்டத்தால் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு - நிதி அமைச்சர்


கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 லிருந்து 2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு கடன் உதவி வழங்கப்படும் - நிதி அமைச்சர்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - நிதி அமைச்சர்

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் கூடுதலாக 23 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது - நிதி அமைச்சர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது, 500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் - நிதி அமைச்சர்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை

சென்னையில் உலகளவில் விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர்

தொழில் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத் தரமிக்க பயிற்சி வழங்கப்படும். இதற்காக 120 கோடியில் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். இத்திட்டத்தில் 12.7லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் - நிதி அமைச்சர்

தென் தமிழகத்தின் அடையாளமாக திகழப்போகும் மதுரை நூலகம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் - நிதி அமைச்சர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ரூ80 கோடி மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர்

பள்ளிக் கல்வித்துறை

அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து நடத்த கோரிக்கை வந்தன. அது மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுமே பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்

புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா

வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் நிதி ஆண்டிலும் நடத்தப்படும் - நிதி அமைச்சர்

திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மகாத்மா காந்தி மருத்துவமனையில் ரூபாய் 110 கோடி மதிப்பில் சிறப்பு கட்டடங்கள் கட்டப்படும் - நிதி அமைச்சர்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் குடும்பத்திற்கு 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 11.82லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive