Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.03.23

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண்: 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

பொருள்:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

பழமொழி :


The true success is to labour

உண்மை வெற்றி உழைப்பிற்கே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை நல்லவிதமாகப் பயன் படுத்தவும் வேண்டும்.

பொது அறிவு :

1. தேசிய ஒருமைப்பாட்டு தினம் யாருடைய பிறந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ? 

 இந்திரா காந்தி . 

 2. செயற்கைப் பட்டு எனப்படும் பாலிமர் எது ? 

 ரேயான்.

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்வது செரிமானத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல் நீங்கும்.

கணினி யுகம்

Alt + F4 : Closes a note and its Journal window. Ctrl+Esc: Open the Windows Start Menu.

மார்ச் 16


அழ. வள்ளியப்பா



அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

நீதிக்கதை

பிறந்தநாள் பரிசு

அன்று மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் கோலகாலமாக இருந்தது. மக்கள் தங்கள் பிறந்தநாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். 

மறுநாள் சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். 

பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தார். அவரை எல்லோரும் வியப்போடு பார்த்தனர். 

தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால், அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று எதிர்பார்த்ததால், அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். 

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தார். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. 

அதனால் எல்லோரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தார். அதில் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று இருந்தது. 

அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்தி சிரிப்பை அடங்கியவுடன், தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவர் தரும் விளக்கம் பெரிதாக இருக்கும் என்றார். உடனே ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன? 

அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். 

அவர் பழத்தின் சுவையைப் போல் இனிமையானவராகவும், அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்னும் புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்றார். அதற்காக தான் இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன் என்றார். 

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்தநாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. 

இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது, என உத்தரவிட்டார். 

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றை எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

இன்றைய செய்திகள்

16.03. 2023

* வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

* பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

* தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு ஹெச்3என்2 பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

* ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம் - ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்.

* அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8 ஆம் இடம் கிடைத்துள்ளது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தில் அஸ்வின்.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி.

* 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்.

Today's Headlines

* The Tamil Nadu Health Department has directed the deputy directors to prepare action plans at the district level to deal with the heat wave.

 * The Madras High Court has directed that the use of loudspeakers during public examinations and temple festivals should be avoided.

* Minister M. Subramanian has said that H3N2 is not affected that much to close schools in Tamil Nadu.

* While the central government is providing free coaching to SC and OBC students to write competitive exams, more than 8 thousand students have benefited from this, Union Minister Ramdas Atwale said in Parliament.

 * India tops in arms imports - Swedish research institute informs.

*  India is ranked 8th in the list of most polluted countries.

 * ICC Test Rankings: Ashwin tops.

 * Indian Wells Tennis: Spain's Algarz qualifies for 3rd round

 * The Women's World Boxing Championship in which players from 74 countries will participate will begin in Delhi today.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive