ஆதாா் தகவல்களை ஜூன் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக கட்டணமின்றி புதுப்பிக்க முடியும் என இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள் தங்கள் ஆதாா் தகவல்களை இலவசமான முறையில் மை-ஆதாா் இணையதள பக்கத்தின் மூலம் மாா்ச் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆதாா் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆதாா் இணையதள பக்கத்தின் வாயிலாக தகவல்களைப் புதுப்பித்துக்க ரூ.25 கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தது.
இருப்பினும், பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்வதற்கு வழக்கத்தில் உள்ள கட்டணம் பொருந்தும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...