பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) மூன்று நாள் கூட்டத்தை பிப்ரவரி 6- திங்கள்கிழமை தொடங்கியது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வட்டி உயர்வால் தனி நபர், வீடு , வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) மூன்று நாள் கூட்டத்தை பிப்ரவரி 6- திங்கள்கிழமை தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அதன்படி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 6. 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...