இந்த ஆண்டு ‘ஜி - 20’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து குறும்பட போட்டியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவிகளும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
ஜி - 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்தும், அதில், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை மாற்றம், பெண்களுக்கான அதிகாரம், ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நிதி, வாழ்வியல், வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், ஏதாவது ஒன்று குறித்தும், குறும்படங்கள் இடம் பெற வேண்டும் என பல்கலையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குறும்பட விடியோக்களை பிப். 28-ஆம் தேதிக்குள் இணையவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஆன்லைன் இணைப்பு முகவரி, அண்ணா பல்கலையின், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...