Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய வருமான வரி விதிப்பால் நடுத்தர மக்கள் பலனடைவார்கள்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடுத்தர வகுப்பு மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் புதிய வருமான வரி விதிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலவழிப்பதற்குக் கூடுதலான பணம் மக்களின் கையிருப்பில் இருக்கும். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளீத்தும் நிதி நிலையை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒன்றிய குழுவின், பட்ஜெட்டிற்குப் பிறகு வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று பிப்.11 நடைபெற்றது. அப்போது, பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத் திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்யத் தூண்டுவது அவசியமில்லை. ஆனால் முதலீடுகள் தொடர்பான தனிப்பட்ட முடிவுகளை எடுக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

நிலையான வரி விலக்குக்கு நாங்கள் அனுமதித்த விதம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள், வெவ்வேறு அடுக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள், இது உண்மையில் மக்கள், வரி செலுத்துவோர், குடும்பத்தினர் ஆகியோரின் கைகளில் அதிக பணத்தை சேமிக்க வைக்கிறது, என்றார். நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு ரூ.50,000 நிலையான விலக்கு பலனை நீட்டிக்க முன்மொழிந்தார். அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டுவது கூட அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

தனது பணத்தை சம்பாதித்து, தனது குடும்பத்தை நடத்தும் ஒரு நபர் தனது பணத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதை அறியும் அளவுக்கு புத்திசாலியாக இருக்கிறார். அதனால் நான் அதைச் செய்வதில் இருந்து அவரை ஊக்கப்படுத்தவில்லை அல்லது குறிப்பாக எதையும் செய்ய அவர்களைத் தூண்டவில்லை. அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும், புதுப்பிக்கப்பட்ட சலுகை வரி முறையின் கீழ், 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.

ரூ.3 முதல் 6 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.6 முதல் 9 லட்சத்துக்கு 10 சதவீதமும், ரூ.9 முதல் 12 லட்சத்துக்கு 15 சதவீதமும், ரூ.12 முதல்15 லட்சத்துக்கு 20 சதவீதமும், ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும். இருப்பினும், ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. அரசின் இந்த நடவடிக்கையானது நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதற்காகவே உள்ளது என்றும், நேரடி வரி விதிப்பை எளிமையாக்குவது என்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்குவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive