அங்கீகார நீட்டிப்பு பெறாத பள்ளிகளின் மாணவர்களும், பொதுத்தேர்வு எழுத, தேர்வுத்துறை அனுமதி அளித்து உள்ளது.
தமிழகத்தில் மார்ச், 13ல் பிளஸ் 2; மார்ச், 14ல் பிளஸ் 1; ஏப்., 6ல் 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு துவங்க உள்ளது.
இந்த தேர்வுகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த முறை புகார்களுக்கு உள்ளான பள்ளிகளுக்கு, தேர்வு மைய அனுமதி வழங்கப்படவில்லை.
அதேபோல, அங்கீகாரம் பெறாமலும், அங்கீகார விண்ணப்பம் அளித்து, சில குறைபாடுகள் உள்ள பள்ளிகளிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. மாறாக, அந்த பள்ளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளி மாணவர்களுக்கு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள், தங்களின் அங்கீகாரத்தை புதுப்பித்தல், நீட்டித்தல், புதிதாக விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...