க்யூட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் 2021-ஆம் ஆண்டு பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டதால், தமிழக மாணவர்களால் தற்போது மதிப்பெண்கள் குறிப்பிட முடியவில்லை.
மார்ச் 12ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ள நிலையில், தமிழக அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கெனவே ஜேஇஇ தேர்வுக்கும் இதே சிக்கல் எழுந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்கு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...