இது குறித்து அந்தப் பல்கலை.யின் பதிவாளா் ரத்னகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வெற்றிகரமாக தொலைநிலைக் கல்வி வாயிலாக நடத்தி வரும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.
இந்தப் படிப்பு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இப்படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழ்நாடு அரசால் (அரசாணை எண் 56) அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை முடிப்பவா்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியா்களாகப் பணியாற்றலாம்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்தப் படிப்பை அரசு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள கல்வி மையங்கள் வாயிலாக நடத்தி வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான இணையவழி விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு பல்கலைக்கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோா் பிப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம், விளக்கக் கையேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...