Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

பழமொழி :

It is no use crying over split milk

முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் யார்?

 கலிலியோ

 2. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது? 

 பாதரசம்.

English words & meanings :

bland - tasteless food. adjective. Porridge is a bland food. சப்பென்று இருக்கும் ருசியற்ற உணவு . பெயரடை 

ஆரோக்ய வாழ்வு :

தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.  பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.


பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்




தேசிய அறிவியல் நாள் (National Science Dayஇந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை

புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு, சகல சாஸ்திரங்களையும் அறிந்த வித்யாசாகர் என்ற ஒரு புலவர் வந்திருந்தார். தம்மை போல் புலமை வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என ஆணவம் கொண்டிருந்தார். அதனால் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள புலவர்களை எல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். 

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராததைக் கண்ட வித்யாசாகர் ஆனவமுற்றார். 

தன் அவையில் சிறந்தவர்கள் யாரும் இல்லையா என இராயருக்கோ வருந்தினார். அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார் என்றார். இதை கேட்டதும் அனைவரும் உற்சாகமாக இருந்தனார். 

அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. மறுநாள் இராமன் ஆஸ்தான பண்டிதரைப் போல் விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். 

இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தார். வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? என்று கேட்டார். இராமன் கம்பீரமாக இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல் என்றார். 

இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்! என்றார். வித்யாசாகருக்கு குழப்பம் இதுவரை எத்தனையோ நூல் படித்திருக்கிறார்! கேட்டிருக்கிறார்! ஆனால் இராமன் கூறியது போல் இந்த நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. 

வித்யாசாகர்கு பயம் ஏற்பட்டது. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் வந்தது. அதனால் வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். 

அன்றிரவு வித்யாசாகர் சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. அதனால் அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார். மறுநாள் அனைவரும் வந்து கூடினார்கள். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. 

அப்பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். 

மன்னர் இராமனிடம்! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு! என்றார். இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. 

அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. 

இதன் உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார் அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். 

நீதி :
நமக்கு எல்லாமே தெரியும் என்று ஆணவத்துடன் இருக்கக் கூடாது...

இன்றைய செய்திகள்

28.02. 2023

* 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

* தோட்டக்கலைத் துறையின் முயற்சியால் உதகையில் பூத்த ஹாலந்து துலிப் மலர்கள்.

* தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

* தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

* விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

* அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்: துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.

* உலக குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம்.

* உலக டேபிள் டென்னிஸ் போட்டி கோவாவில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* Assembly Speaker Appavu said that Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan is going to present the financial report for the year 2023-24 in the Legislative Assembly on March 20.

* Holland tulips bloomed in Utagai thanks to the efforts of the horticulture department.

* The Central Institute of Classical Tamil Studies has released a mobile application that is an audio version of Tolkappiyam.

 * Chance of rain for 3 days in south coastal districts of Tamil Nadu.

*  Prime Minister Narendra Modi has released Rs.16 thousand crores as the 13th tranche of funds under the Prime Minister's Financial Assistance Scheme for Farmers.

* The Delhi High Court has ruled that the Agnibad project will go ahead according to law.

 * 1.60 lakh buildings have been collapsed due to the earth quake: Construction of houses in Turkey begins.

 * World Boxing Series: 3 silver medals for India.

 * The World Table Tennis Tournament started yesterday in Goa.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive