ஆதாருடன் இணைக்கப்படாவிட் டால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று மத்திய நேரடிவரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வரும் மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டுகள் அனைத்தும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயலற்றதாக மாறிவிடும்.
அப்படி பான் கார்டு காலாவதியாகிவிடும்பட்சத்தில் ஒருவர் அதனை பயன்படுத்தி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்த இயலாது. நிலுவையில் உள்ள ரீபண்டு தொகையையும் திரும்பப் பெற முடியாது.
வருமான வரி தாக்கலில் குறைபாடு இருக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக முடிக்க இயலாது. இதனால் வரிகள் அதிக விகிதத்தில் கழிக்கப்படும். எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் உடனே பான் எண்ணைஆதாருடன் இணைக்க தொடங்குகள் என சிபிடிடி அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...