Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02/25003௩

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: அடக்கம் உடைமை..

குறள் : 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்

பழமொழி :

A brave man may fall, but he cannot yield
வீழ்ந்தாலும் வீரன் அடிபணிய மாட்டான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான். 

பொது அறிவு :

1. மேட்டூர் அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது ?

 1934 ஆம் ஆண்டு . 2. ஆதி காவியம் என்றழைக்கப்படுவது எது? சிலப்பதிகாரம்.

English words & meanings :

the best ant - excellant (excellent)

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.

NMMS Q

வலை பின்னல் நரம்பமைவு கொண்ட தாவர இலைகள்
விடை: இரு விதையிலை தாவரங்கள்

பிப்ரவரி 16

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalkeஏப்ரல் 301870 - பிப்ரவரி 161944இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது

நீதிக்கதை

மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்

16.02.2023

* தமிழகத்தில் சென்னை, நெல்லை உட்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

* சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

* நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்களை வாங்க அர்ஜென்டினா, எகிப்து ஆர்வம்.

* நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. இதனை அரசு நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

* 2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டுக்கு வரும் - ஐக்கிய அரபு அமீரக பிரதமர் அறிவிப்பு.

* ஐசிசி தரவரிசை: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் இடம் பிடித்த இந்திய அணி.

* ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி - முதல் சுற்றில் கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

* சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி.

Today's Headlines

* NIA officers raided many places in Tamil Nadu including Chennai and Nellai.

 * Extension of deadline till February 28 to link Aadhaar number with electricity connection number.

 * Union Cabinet has approved deployment of 7 additional battalions for border security along the China.

 * Union Cabinet approves setting up of 2 lakh Primary Agriculture Credit Unions across the country.

 * Argentina and Egypt are interested in buying Tejas fighter jets from India.

 * A powerful earthquake had hit New Zealand.  The earthquake measured 6.1 on the Richter scale.  This has been confirmed by the Government Earthquake Research Center.

 * Flying taxis to be in use in Dubai by 2026 - UAE PM announces.

 * ICC Rankings:  Indian team ranked top in all forms of cricket.

 * Asian Badminton Mixed Teams Championship - India beats Kazakhstan in first round

 * Chennai Open Challenger Tennis: Indian player Sumit Nagal won in the first round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive