Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளியில் 15 வருடங்களுக்கு முன் பயின்ற மாணவர்கள் இலவசமாக Interact Smart Board பரிசாக வழங்கினார்கள்.

 


 

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் ஜி.டி.பாபு ஆசிரியரின் கல்வி சேவையினை பாராட்டி அவரிடம் 15 வருடங்களுக்கு முன் பயின்ற மாணவர்கள் அவருக்கு இன்ட்ராக்ட் இஸ்மார்ட் போர்டு பரிசாக வழங்கினார்கள்.
இதற்கான நிகழ்வு பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜேதீஸ்வரபிள்ளை தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக உதவித்தலைமையாசிரியர் குமரன் வரவேற்று பேசினார்.
வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, வேலூர் மாநகராட்சியின் முதல் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், முதல் வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.அன்பு ஆகியோர்  முன்னிலையில் கால்நடைமருத்துவர் ரவிசங்கர், மென்பொருள் பொறியாளர் ஏ.மணிகண்டன், தனியார் துறை சிலம்பரன், தேவராஜ், வேல்முருகன் ஊரக உள்ளாட்சித்துறை உதவியாளர் சக்திவேலன், உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள்  வழங்கினார்கள்.முன்னாள் மாணவர்கள் சார்பாக ஆசிரியர் ஜி.டி.பாபுவிடம் இன்ட்ராக்ட் ஸ்மார்ட் போர்டினை வழங்கினர்.
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தொழிற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சச்சிதானந்தம், க.ராஜா, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  கணித பட்டதாரி ஆசிரியர் ஆர்.சிவராமன் தொகுப்புரையாற்றினார்.  
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்  ஜி.டி.பாபு நன்றி கூறினார். 







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive