நகர்ப்புர உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளின் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் QR Code மூலம் பொதுமக்கள் புகார்கள் அளிக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கழிப்பறைகள் தொடர்பாக இதுவரை 1,25,906 பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்துள்ளதாகவும் மேலும் பலரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
QR Code விவரம் இந்த QR Code விவரம் அடங்கிய சிறு அட்டை, அனைத்து பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளில் பொருத்தப்படவேண்டும் என திட்டமிடப்பட்டதன் முன்னோடியாக, இதுவரை 7,954 கழிப்பறைகளில் QR Code பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,715 கழிப்பறைகளில் QR Code பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இக்கழிப்பறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், கழிப்பறைகளில் உள்ள வசதிகளின் நிலை மற்றும் குறைபாடுகள் குறித்து தங்களது கைப்பேசியில் QR Code ஐ ஸ்கேன் செய்து கருத்துக்களை பதிவு செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...