திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக திரு.அ.ஷாஜஹான் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆசிரியர் பணிகளோடு தமிழ் ஆர்வலர் கலை ஆர்வலராக சமூக ஆர்வலராகவும் இருந்து தமது பணிகளை ஆற்றி வருகிறார். இவர் தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழாவில் சேலம் மாவட்டம் வனவாசி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக தமிழகப்பாரம்பரியக்கலைகளான தப்பாட்டம், கரகாட்டம் , ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம் கிராமிய விழிப்புணர்வு பாடல்கள், கிராமிய நடனங்கள் மற்றும் நகைச்சுவை நடனங்கள் என இடைநில்லாது பாரம்பரியக்கலைகளை தொடர் நிகழ்ச்சியாக "
5 மணி நேரம்
5 நிமிடங்களுக்கு" நிகழ்த்தி ORANGE WORLD RECORDல் உலக சாதனையாக பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழ் நாடு அரசின் மாநில நல்லாசிரியர் மற்றும் கலை நன்மணி விருதும், மற்றும் இந்து நாளிதழின் அன்பாசிரியர் விருது, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் சிறந்த ஆசிரியர் விருதும், சன் தொலைக்காட்சி, நாட்டுப்புறத்தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி, தினமலர் தினகரன் தினதந்தி ,தீக்கதீர் மற்றும் திண்டுக்கல் நகர் போன்ற நாளிதழ்களிலும் இவரது ஆசிரியர் பணி,தமிழ்ப்பணி, கிராமியக்கலைப்பணி, சமூகப்பணிகளை பற்றிய செய்திகளை வெளியிட்டு பாராட்டி உள்ளது மேலும் இவரது ஆசிரியர் பணி தமிழ்ப்பணி,கலைகள் பணி,சமூகப்பணிகளை பாராட்டி 350 மேற்பட்ட விருதுகளும் 600 மேற்பட்ட பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது மேலும் பள்ளி மாணவச்செல்வங்களை அரசு சார்ந்த கலை மேடைகளில்,இணையவழி தமிழ் மேடைகளில் ஏற்றி அவர்களின் முகவரிகள் ஆளுமைத்திறன்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வருவதோடு பலவேறு விருதுகளும் பெற வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...