''நீட்
தேர்வு தொடர்பாக, ஆயுஷ் அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, விரைவில்
விளக்கம் அனுப்பப்படும்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
சுப்பிரமணியன் கூறினார். நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு
அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம்
நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பாக, சில கேள்விகளை ஆயுஷ் அமைச்சகம், தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், ''நீட் தேர்வு தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து, சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதற்கான பதிலை அனுப்பும் முயற்சியை, சட்டத்துறை செய்து வருகிறது. சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, இன்னும் ஓரிரு வாரத்திற்குள், ஆயுஷ் அமைச்சகத்திற்கு பதில் அனுப்பப்படும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...