அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
அரசு
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான
அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து , இந்த உயர்வினை
1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது . இதன்படி ,
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக
உயர்த்தப்படும் . இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் ,
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் .
இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம்
ஏற்படுமெனினும் , அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...