ஏற்கனவே 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை), ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் தற்போது தக்கல் முறையில் இன்று 30.01.2023 முதல் 01.02.2023 வரையிலான நாட்களில் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் (Government Examinations Service centres) நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் இணையதளத்தில் அறிவுரைகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் www.dge1.tn.gov.in என்ற இனையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...