Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.01.23

 


 

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை நினைத்துப் பார்த்தால், அந்த உதவி இந்த பூமியை விட மிகப் பெரியதாகும்.

பழமொழி :

Anybody can make history.
எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

பொது அறிவு :

1. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? 

கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி. 

2. திருவிளையாடற் புராணத்தைத் தொகுத்தவர் யார்? 

சேக்கிழார்.

English words & meanings :

hair - object which covers the head, noun . முடி. பெயர்ச் சொல். hare - rabbit. noun. முயல். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :




ஆளி விதை பொடியை பாலில் கலந்து குடிப்பது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

NMMS Q

(-2) x (-10) x 0 x 5 = _______ 

a) 100.       b) -100       c)0.      d) 1. 

விடை: 0

நீதிக்கதை

எவ்வுயிரும் நம் உயிரே

ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார். புன்னகை புரிந்தார்.

உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும். உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசிகூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.

சில நாட்கள் கழிந்தன. காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது. நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த நல்ல பாம்பு யாரையும் அலட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.

ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ.. சூ... எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர். அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது. டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.

நம்மைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா! என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.

அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம். ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.

அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு.

சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது.

அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார். உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியதுதானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது.

ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள். நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன். உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள். சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே!

மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.

அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதேபோல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

இன்றைய செய்திகள்

10.01.2023

* மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை வரும் 13-ம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

* ஜோஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற்படும் பகுதி என அறிவிக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

* வடமேற்கு இந்தியாவை வாட்டும் கடும் குளிர்: பள்ளிகளுக்கு ஜனவரி-15 வரை விடுமுறை நீட்டிப்பு.

* கேரள அரசின் ஆவணத் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் ஆகும்.

* அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க்கப்பல் கர்ஷ்கோவ் அட்லாண்டிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறது.

* பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* சென்னையில் நடைபெற்ற தி ஃபிரஷ்வொர்க்ஸ் சென்னை மாரத்தான் போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் ஸ்ரீநிவாசன் முதலிடம் பிடித்தார்.

* ஒடிசாவில் உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி: பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

* அடிலெய்டில் நடைபெற்று வந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Today's Headlines

* The Supreme Court has confirmed the fine of Rs 75 lakh imposed by the National Green Tribunal on the Tamil Nadu Electricity Board in connection with the death of wild animals including an elephant caught in the electric fence.

 * The Tamil Nadu government has informed the Madras High Court that 55 rehabilitation centers for mentally challenged people are functioning with government funding in all districts across Tamil Nadu.

*  It has been decided in the official meeting that the Tamil Nadu Legislative Assembly will be held till the 13th.

 * The District Judge of Samoli has said that the Joshimath Nagar area has been declared a disaster-prone area as landslides and land cracks continue to occur.

*  Extreme cold hits northwest India: School holidays extended till Jan-15

 * A Palm Leaf Suvadi Museum has been started in Thiruvananthapuram at a cost of Rs.3 crore by the Department of Documentation, Government of Kerala.  It is the world's first palm frond museum.

 * Russia's warship Khrushkov, equipped with hypersonic missiles, is on patrol in the Atlantic Ocean to warn the US.

 * Riots erupted in Brazil as supporters of former president Jair Bolsonaro vandalized the parliament and Supreme Court buildings.  For this incident, UNO and the US condemned the rebels. 

 * Coimbatore's Vinod Kumar Srinivasan topped The FreshWorks Chennai Marathon held in Chennai.

 * Men's Hockey World Cup begins in Odisha with the grand opening ceremony

 * Belarus player Aryna Sabalenka won the title in the international tennis tournament held in Adelaide.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive