தமிழகத்தில் உள்ள அனைத்து துறை
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது TNPSC போட்டித் தேர்வுகள்
நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு
தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும்.
கிட்டத்தட்ட
2 வருடங்களுக்கு பிறகு 2022ம் ஆண்டு குரூப் 2 & 2A நடத்தப்பட்டது.
5,000 மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட இத்தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர்
எழுதினர்.
தமிழகத்தில் வணிகவரி அதிகாரி,
நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர்,
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்காக
இத்தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக தேர்வின்
முடிவினை எதிர்பார்த்து வந்த தேர்வர்களுக்கு கடந்த மாதம் முடிவுகள்
வெளியானது.
மேலும் தேர்வர்கள் அசல் கல்வித்தகுதி
மற்றும் அடையாள சான்றிதழ்களை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று TNPSC
தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்
தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அசல்
சான்றிதழை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று TNPSC தேர்வாணையம்
தெரிவித்துள்ளது. அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 16 இறுதி நாள்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...