இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை, தொலை துார கல்வி வாயிலாக இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது, 2023க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதலுடன், இப்பல்கலையில் வழங்கப்படும், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நுழைவுத்தேர்வு இன்றி சேர்க்கை நடக்கிறது.
இதில் சேர விரும்புவோர், https://ignouiop.samarth.edu/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி, 'ஆன்லைன்' வாயிலாக சேர்ந்து கொள்ளலாம்; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31.
குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
கூடுதல் விபரங்களை, www.ignou.ac.in என்ற பல்கலை இணையதளம் அல்லது சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் மண்டல அலுவலகத்தை, 044- - 2661 8040 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...