தமிழகத்தின் 8 மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.26) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து சுமாா் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (டிச. 26) இலங்கை வழியாக குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...