தமிழக அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலர்களின் நிர்வாக முறைகளை முழுமையாக கணினி வழியே புகுத்த பள்ளி கமிஷனரகம் முயற்சித்து வருகிறது..
இதன் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கான தேர்வு வினாத்தாள்களை வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வு போல ஆன்லைன் வழியில் அனுப்பும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை பரிசோதனை செய்துள்ளது
இதனால் வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டு லீக் ஆவது தடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை முறையில் நடத்தப்படும் இந்த தேர்வில் வினாத்தாள்கள் உரிய நேரத்தில் பதிவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட இணையதளத்தின் கூடுதல் செயல் திறனை தாங்கும் வகையில் சர்வர் இணைப்பு பெற்றிருக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...