சம
வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரிரியர்கள்
சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த
ஆட்சியில் போராட்டம் நடத்திய போது வசனம் பேசியவர்கள் தற்போது ஆட்சிக்கு
வந்த பிறகு தேர்தல் அறிக்கை 311 ல் கூறியபடி சமவேலைக்கு சம ஊதியம் என்பதை
மறந்து விட்டனர்.
தங்களது ஒரே கோரிக்கையான சமவேலைக்கு சம ஊதியம்
நிறைவேற்ற வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள்
சென்னை டிபிஐ வளாகத்தில் குவிந்து வருகின்றனர்.
மாணவர்கள் கல்வி பாதிக்க கூடாது என்பதால் ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று
மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கல்வி அமைச்சர் நேரில்
சந்தித்து தீர்வு காண வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...