தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி I இல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் - 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான புதிய அறிவிப்பை உயர்கல்வித் துறை (டிஎன்ஜிஏஎஸ்ஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: கௌரவ விரிவுரையாளர்
காலியிடங்கள்: 1895
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்க்கவும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை, முனைவர் பட்டம், நெட், செட், சிலட் தேர்வு உள்ளிட்ட ஏதாவதொரு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக்க கட்டணம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.100, இதரப் பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முதுகலை, எம்.பில்., பிஎச்.டி பட்டம் மற்றும் முதுகலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் புகைப்பட நகல்களுடன் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2022
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...