இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.22 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.22 அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும் . குறுவளமைய பயிற்சியின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் இருவேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படவேண்டும்.
ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுநருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .130 / இதற்காக செலவு செய்ய வேண்டும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கிகணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் . பயிற்சிக்கான தண்ணீர் , TLM போன்ற இதர செலவினங்களையும் பயிற்சி தலைப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும் .
எனவே பயிற்சிக்காக ஒரு தன்னார்வலர் விதம் ரூ .200 வரை செலவு மேற்கொள்ள வேண்டும் என இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...