தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21ம் தேதி வெளியிட்டது.
அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்த
னர். முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலை தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...