கடந்த சில நாள்களாக தில்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல தில்லி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ, தில்லி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், காற்று மாசு மிகவும் மோசமான நிலையிலுள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. காற்று மாசு சீரான நிலையை அடையும் வரை குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...