அரசு மருத்துவக் கல்லூரிகளில் உளவியல்துறை உதவி பேராசிரியர் பதவியில் காலியாகவுள்ள 24 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. உளவியல் அல்லது மருத்துவ உளவியலில் முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், சமூக உளவியலில் முதுகலை டிப்ளமா பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கணினிவழி தேர்வு வரும் மார்ச் 14-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 37. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. உரிய கல்வித்தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...