அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர்கள், மாற்றுப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் போன்றவற்றில், மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், அக்டோபரில் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால், பல அரசு மேல்நிலை பள்ளிகளில், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு பணிகள் உட்பட, பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, பணியாளர் பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்ற பள்ளிகளுக்கு, அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் மாற்றுப் பணி பார்க்க வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...