ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ இடைத்தேர்வு, இன்று துவங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை முப்பருவ தேர்வு முறை அமலில் உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதியில் பொது தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு பருவ தேர்வுகளுக்கு இடையில், மாணவர்களை தயார்படுத்தும் வகையில், பருவ இடைத்தேர்வுகளை, பள்ளிக்கல்வி துறை நடத்துகிறது.
அதன்படி, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ இடைத்தேர்வு இன்று துவங்குகிறது; 10ம் வகுப்புக்கு வரும், 18ம் தேதியும்; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 19ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன.
இதற்கான வினாத்தாள்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே தயாரிக்கப்பட்டு, மாவட்ட அளவில் பொது தேர்வு போல நடத்தப்படுகிறது. கல்வி ஆண்டின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட பாடப் பகுதிகளில் இருந்து மட்டும் வினாக்கள் இடம் பெறும் என, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...