இந்த Academic authority அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாவது - that the teachers to be recruited in future for the elementary segment should have passed the Teacher Eligibility Test என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் to be recruited in future என்ற வார்த்தைகளின்படி பார்த்தால் இந்த அரசாணைக்குப் பின்னர் எதிர்காலத்தில் புதிய நியமனங்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.
பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனவே நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கும் TET தேவை எனக் கருதி வழிகாட்டினால், துறைரீதியாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளவைகளை மேற்கோள்காட்டி மேல்முறையீடு செய்வதே சரியானதாக இருக்கும்.
கல்வித்துறை இதனை முன்னெடுக்கும் என நம்புவோம். இத்தகைய முன்னெடுப்பு ஆசிரியர்களுக்கு செய்யப்படும் சலுகை அல்ல, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை நிலைநிறுத்துவதாகும்.
G.O..No. 181 Dt. 15.11.2011 பள்ளிகல்வி - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009 இன் படி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துதல் சார்ந்த அரசாணை - Click here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...