மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணிக்காலி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும். இந்த தேர்வுகளை ஸ்டாப் செலக்சன் கமிஷன்- எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) நடத்தி வருகிறது.இந்த தேர்வு குறித்த தகவல்கள் கடந்த வாரங்களில் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்தும், எவ்வாறு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.தேர்வுக்கு தயார் செய்யும் முறைமுதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள்.
பின்பு அதை ஒரு தனித்தாளில், பாடவாரியாக (கணிதம், ஆங்கிலம், புத்திக்கூர்மை, பொது அறிவு) எழுதுங்கள். பின்பு மீண்டும் அதை வாசித்துப் பாருங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள். எப்படி படிப்பது, எதிலிருந்து ஆரம்பிப்பது, எந்தப் பகுதிக்கு விடையளிப்பது, எது கடினமாக உள்ளது என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.பொது அறிவுப்பகுதி, புத்திக்கூர்மைத் திறன் மற்றும் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் வினாக்கள் பட்டப்படிப்பு கல்வித் தரத்தில் அமையும். கணிதப்பகுதி மட்டும் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தில் அமையும். பொது அறிவுப் பகுதியில் வரலாறு, புவியியல், இந்திய கலாச்சாரம், பொருளாதாரம், அறிவியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.ஜெனரல் இன்டலிஜன்ஸ் (General Intelligence)அனைத்து திறனறி தேர்வுகளிலும் இப்பகுதி இடம்பெறுகிறது. இதில் Verbal Reasoning மற்றும் Non Verbal Reasoning என இரு பகுதி களாக வினாக்கள் அமைகின்றன. Non- Verbal Reasoning பகுதியில் படங்கள் (Diagrams மற்றும் Figures) இடம் பெறுகின்றன. இந்த படங்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்பில் அமைக்கப்படுகின்றன. இந்த தொடர்பைக் கண்டறிந்து, அதன் விடையை தேர்வு செய்வதில் நமது திறனைப் பயன் படுத்த வேண்டும். இத்தேர் வின் நோக்கம் விண்ணப்பதாரரின் ஆராய்ந்தறியும் திறனைக் கண்டறிதலே ஆகும்.இப்பகுதியில் வினாக்கள் மூன்று பிரிவுகளில் அமைகிறது.1) Series, 2) Analogy, 3) Classificationஒவ்வொரு பிரிவிலும் எப்படியெல்லாம் வினாக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை பயிற்சியின் மூலம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
தொடர் பயிற்சியின் மூலம், வேகமாக சிந்திக்கும் திறன், கொடுக்கப்பட்ட வினாவில் உள்ள படங்களுக்கு இடையே உள்ள தொடர்பு (Correlation) மற்றும் வேறுபாடு ஆகியவற்றை கண்டறியும் நுட்பம், அறிவுத்திறன் (Mental Ability) ஆகியவை மேம்படுவதுடன், இவ்வினாக்களைத் தீர்வு செய்ய தனி யுக்தியையும் வகுத்துக் கொள்ளலாம்.Verbal Reasoning பகுதியில் படங்களுக்குப் பதிலாக எண் தொடர்கள், ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தொடர்கள் Coding, Decoding ஆகிய பிரிவுகளில் வினாக்கள் அமைகிறது. இந்த வகை வினாக்கள் எத்தனை வகைகளில் (Pattern) அமைகிறது என்பதை அறிந்து அதைத் தீர்வு செய்ய பழகிய பின்பு, குறைந்த நேரத்தில் தீர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் நேர நிர்வாகம் மிக முக்கியம்.இப்பகுதிக்கு இதர மூன்று பகுதி களைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. LOGIC-ஐ புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். Analogy, Ranking, Sitting Arrangements, Blood relations, Directions, Series Problems போன்ற பகுதிகளை முதலில் முடித்து விட வேண்டும். Syllogism, Statement and Conclusion, Coding and Decoding போன்ற பகுதிகளுக்கு Analytical Reasoning தொடர்பான புத்தகங்களைப் படிக்கலாம்.
அதிக அளவில் இவ்வினாக்களை பயிற்சி செய்யும்போது உங்களுக்கே ஒரு தெளிவு கிடைக்கும்.லாஜிக்கல் ரீசனிங் (Logical Reasoning)பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அறிந்த தகவல் களைக் கொண்டு சரியாக யூகிப்பது அல்லது முடிவுகளை எடுப்பதை 'ரீசனிங்' என விளக்கலாம். அறி வியல் பூர்வமான சரியான காரணம் அறிதலே 'லாஜிக்' எனப்படுகிறது. பொதுவாக தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.நமது அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களில் நம்மை அறியாமலேயே லாஜிக்கை (Logic) பயன்படுத்துகிறோம். ஆனால் பயன்படுத்தும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.Logical Reasoning வகை வினாக்களில் இரண்டு அல்லது மூன்று கூற்றுகள் (Statement), புள்ளி விவரம், நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் அளிக்கப்படும். இந்த கூற்றுகளின் (Premises) அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று முடிவுகளும் (Conclusion) இருக்கும். இவற்றில் எவை சரியானது, எவை தவறானது, அனைத்தும் சரியா அல்லது அனைத்தும் தவறா என்பதை விடையாகக் குறிக்க வேண்டும்.
கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்.கூற்று: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 200 ரன்களை எடுத்தது. இதில் 160 ரன்களை எடுத்தவர்கள் அந்த அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள்.முடிவு: 1) அந்த அணியில் 80 சதவீதம் வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள். 2) இந்த போட்டியில் துவக்க நிலை ஆட்டக்காரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள்.இப்போது கீழே கொடுக்கப்பட்டவற்றில் இருந்து விடையைத் தேர்வு செய்யவும்.A. முடிவு 1 மட்டும் சரி, B. முடிவு 2 மட்டும் சரி, C. முடிவு 1 அல்லது 2 சரி, D. முடிவு 1 மற்றும் 2 தவறு, E. இரண்டும் சரிமுதல் முடிவை ஆய்வு செய்வோம். அந்த அணியில் 80 சதவிகிதம் சுழற்பந்து வீசுபவர்கள் என்ற விவரம் கூற்றில் எங்கும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் 160 ரன்கள் சுழற்பந்து வீசுபவர்கள் எடுத்தார்கள் என்பதற்காக அவர்கள் துவக்கநிலை ஆட்டக்காரர்களாக இருந்திருக்கலாம் எனக் கூற முடியாது. எனவே இதற்கான விடை D ஆகும்.கூடுதல் மாதிரி வினாக்களை அடுத்த வாரம் பார்க்கலாம். அது உங்களை நீங்களே சோதித்துக் கொள்ள வழிவகுக்கும்.எம்.கருணாகரன்,துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...