Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் MBBS, BDS - Rank List இன்று வெளியாகிறது!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியாகிறது. நடப்பு 2022-2023ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கை நடப்பதை அடுத்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  வேண்டும் என்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்தது.

அதன்படி மொத்தம் 40,264 விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழுவுக்கு வந்துள்ளது. அவற்றில் அரசு கல்லூரிகளில் சேர 25,059 விண்ணப்பங்களும், தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 15,205 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களில் 5022 பேர் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். 85 பேர் மாற்றுத் திறனாளிகள், படைவீரர் பிரிவினர் 355 பேர், விளையாட்டுப் பிரிவினர் 306 பேர் உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்களிலும் சென்னை, கே.கே.நகர் இஎஸ்ஐசி மரு்த்துவக் கல்லூரியில்  125 இடங்களிலும், 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3050 இடங்களிலும்  அரசு ஒதுக்கீட்டு இ டங்களில் சேர்க்கை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 848 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர சுயநிதிமருத்துவக் கல்லூரிகளில் 1290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.

நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 455 பேர் சேர்க்கப்படுவார்கள். பல் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 114 பேர் சேர்க்கப்படுவார்கள். பல் மருத்துவப் படிப்பை பொருத்தவரையில் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்  1960 இடங்களும்  மாநில அரசு இடங்களாக வைக்கப்பட்டு சேர்க்கை நடக்கிறது.

அவற்றில் 605 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். இந்நிலையில், இன்று காலை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவ மனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்குரிய ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காலை 9 மணி அளவில் வெளியிடுகிறார். இதையடுத்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் 19-ம் தேதி நேரடி முறையில் தொடங்கும் என்றும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive