கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் திட்டம்!
கல்விக்
கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக
அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-கல்விக்
கடன்களுக்கான உத்திரவாத வரம்பை 33 சதவீதம் உயர்த்துவது குறித்து கல்வி
அமைச்சகத்துடன் நிதி அமைச்சகத்தில் உள்ள நிதிச் சேவைகள் துறை ஆலோசனைகளைத்
தொடங்கியுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கையானது, தில்லி மற்றும் மேற்கு
வங்கம் போன்ற சில மாநிலங்களில், மொத்த உத்தரவாதத்தை ரூ. 10 லட்சமாக
அதிகரிக்க கூடுதல் காப்பீட்டை வழங்கும் மாநில அரசின் திட்டங்களின் வரம்பை
ஒட்டுமொத்த காப்பீட்டிற்கு இணையாகக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக
கூறப்படுகிறது.
"நிதிச்
சேவைகள் துறையானது, கல்விக் கடனுக்கான பிணையமில்லா வரம்பை அதிகரிப்பதற்கு
ஆதரவாக உள்ளது, மேலும், கல்விக் கடனுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு கல்வி
அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இது ரூ. 10 லட்சம் அல்லது
அதற்கும் அதிகமாக இருக்கலாம்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
குறைந்த மதிப்புள்ள கல்விக்
கடன்களை வழங்குவதில் பொதுத்துறை வங்கிககள் எச்சரிக்கையாக இருப்பதால்,
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதை காரணம் காட்டி, கல்விக்
கடன்களுக்கு தடைகள் மற்றும் கடன்களை தர மறுப்பது போன்ற பல புகார்களை
சுட்டிக்காட்டி, கல்விக் கடன்கள் வழங்குவதை விரைவுபடுத்துமாறு பொதுத்துறை
வங்கிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து
குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்கள் செயல்படாத சொத்துக்களாக மாறி
வருவதால், வங்கிகள் கடன் வழங்குவதில் எந்தத் தயக்கத்தையும் சமாளிக்க
உத்தரவாத வரம்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,
தற்போதைய நடைமுறைப்படி, பிணையமில்லாக் கடன் பெறுபவர்கள் தற்போது ரூ. 7.5
லட்சம் வரை கடனுக்கான காப்பீட்டிற்கு பெயரளவிலான கட்டணத்தைச் செலுத்த
வேண்டும். கடன் வரம்பை அதிகரிப்பதற்கு இந்த கட்டணம் சிறிதளவு
அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...